தேசிய சுகாதார கணக்குகள் மதிப்பீடுகளில் தவறுகள் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி, குறிப்பாக மக்களின் மொத்த செலவினக் குறைப்பு என்பது தவறானது மற்றும் உண்மையற்றது.தேசிய சுகாதார கணக்குகள் அமைப்பு, நாட்டின் சுகாதாரத் துறையில் செய்யப்படும் செலவுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.இந்த மதிப்பீடுகள் முக்கியமானவை. ஏனெனில் அவை நாட்டின் தற்போதைய சுகாதார அமைப்பின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, பல்வேறு சுகாதாரம் தொடர்பான நிதி ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் அரசுக்கு உதவுகின்றன.
சமீபத்திய தேசிய சுகாதார கணக்குகள் மதிப்பீடுகள் (2018-19) தெரிவிப்பது, பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. என்எஸ்எஸ் தகவலின் படி, கடந்த 15 நாட்களில் பொது மக்கள் அரசு மருத்துவ சேவை வசதிகளை பயன்படுத்தியது கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளது.
பொது மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கிராமப்புறங்களில் 4% மற்றும் நகர்ப்புறங்களில் 3% ஆக அதிகரித்துள்ளது.மேலும், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் சராசரி மருத்துவச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமான குறைக்கப்பட்டுள்ளது.