fbpx

இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல்கள்.. 8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு..

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 8 யூடியூப் சேனல்களை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.

2021 ஐடி விதிகளின் கீழ் ஏழு இந்திய மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.. முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் 85,73,000 சந்தாதாரர்களையும் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ ஐடி விதிகள், 2021 இன் கீழ் உள்ள அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, 8 யூடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்களை முடக்குவதற்கான உத்தரவுகளை 16.08.2022 அன்று பிறப்பித்துள்ளது.

முடக்கப்பட்ட யூடியூப் சேனல்கள் 114 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்தன, 85 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் சந்தா பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள மத சமூகங்களிடையே வெறுப்பை பரப்பும் நோக்கில் இந்த யூடியூப் சேனல்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சேனல்கள் வெளியிட்ட வீடியோக்களில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மத கட்டடங்களை இடித்துத் தள்ளுவதற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது, மதப் போரைப் பிரகடனப்படுத்துவது போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன.. இதுபோன்ற உள்ளடக்கம் நாட்டில் மத நல்லிணக்கத்தை உருவாக்கி, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் சாத்தியம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

யூடியூப் சேனல்கள் வெளியிட்ட செய்திகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி மாநிலங்களுடனான இந்தியாவின் நட்பு உறவுகள் மற்றும் நாட்டில் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டது. அதன்படி இந்த சேனல்கள் முடக்கப்பட்டது..

தவறான தகவல்களைப் பரப்பியதற்காக யூடியூப் சேனல்களை மத்திய அரசு அமைச்சகம் முடக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 16 யூடியூப் சேனல்களை அரசாங்கம் முடக்கியது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 செய்தி சேனல்களும், 10 இந்திய செய்தி சேனல்களும் அடங்கும்..

Maha

Next Post

பேருந்துகளில் பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாது.. தமிழக அரசு எச்சரிக்கை..

Thu Aug 18 , 2022
பேருந்துகளில் பெண் பயணிகளை முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்த பயணத்தின்போது, சக ஆண் பயணிகளால் பெண்களுக்கு பல்வேறு வகையில் இடையூறுகள் அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில், பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. […]

You May Like