fbpx

உத்திரபிரதேசத்தில் சோகம்: துடிதுடிக்க பலியான 5 உயிர்கள்.! குடும்பமே தீயில் கருகிய துயர சம்பவம்.!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால், இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூரில், கடந்த சனிக்கிழமை அன்று ஒரு வீட்டில் தீப்பிடித்ததில், அந்த வீட்டில் இருந்த கணவன் அஜய் குப்தா(35), அவரது மனைவி அனிதா குப்தா(34) மற்றும் அவரது மூன்று குழந்தைகளாகிய மகன்கள் திவ்யான்ஷ்(9), தக்ஷ்(3) மற்றும் மகள் திவ்யான்ஷி(6) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் அறையில் இருந்த ஹீட்டரில் ஏற்பட்ட மின் கசிவோ அல்லது உள் வயரிங்கில் ஏற்பட்ட மின் கசிவோ இந்த தீ விபத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களது அண்டை வீட்டுக்காரர் கூறுகையில், “இன்று காலை குப்தா வீட்டிலிருந்து புகை வருவதை கண்டோம். அலறியடித்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்கு ஓடினோம். பிரதான கதவை திறந்து வீட்டிற்குள் சென்றபோது, வீட்டில் இருந்த தம்பதி மற்றும் 3 குழந்தைகள் உட்பட, 5 பேரும் உடல் கருகிய நிலையில் இருந்தனர். உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம்.” என்று பதட்டத்துடன் தெரிவித்தார்.

போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சம்பவ இடத்திலேயே 5 பேரும் உடல் கருகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எல்லா கோணங்களிலும் இந்த விசாரணையை நடத்துவதாகவும் கிராமப்புற காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சந்திர மிஸ்ரா தெரிவித்தார்.

Next Post

"'பிப்ரவரி 14' - காதலர் தினம் அல்ல.. தாய் தந்தையை வணங்கும் நாள்."!! பாஜக அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

Mon Jan 29 , 2024
உலகமே பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்ட தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மதன் திலாவர். இவர் அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை பஞ்சாயத்து ராஜ் மற்றும் சமஸ்கிருத கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் காதலர் […]

You May Like