fbpx

ஓய்வூதியம் பெறும் நபர்களே… இனி உயிரோடு இருக்கும் போதே இதை செய்யலாம்…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!

தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்‌ குடும்ப பாதுகாப்பு நிதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஓய்வூதியதாரரின்‌ விருப்பத்தின்பேரில்‌, அவரின்‌ ஓய்வூதியத்திலிருந்து சந்தாத்‌ தொகை பிடித்தம்‌ செய்யப்பட்டு, ஓய்வூதியர்‌ இறக்கும்‌ நேர்வில்‌ அவர்தம்‌ துணைவருக்கோ அல்லது அவரது துணைவர்‌ உயிரோடு இல்லாதபோது ஓய்வூதியர்‌ நியமனம்‌ செய்தநியமனதாரருக்கோ இத்திட்டத்தின்‌ கீழ்‌ ஒட்டுமொத்த தொகையானதுவழங்கப்படும்‌.

மேலும்‌, துணைவர்‌ உயிரோடு இல்லாமலிருந்தாலோ அல்லது நியமனதாரர்‌ எவரும்‌ நியமிக்கப்படாத நிலையில்‌, ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வூதியரின்‌ வாரிசுதாரர்களுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும்‌.

ஏற்கனவே பல்வேறு ஓய்வூதியதாரர்களின்‌ சங்கங்கள்‌ மற்றும்‌ ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்‌ குடும்ப பாதுகாப்பு நிதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஓய்ஷதியர்‌ இறந்த பின்பு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்தத்‌ தொகையினை பெறுவதற்குரிய நியமனதாரரை, ஓய்வூதியரோ அல்லது அவரது துணைவரோ ஒருவரும்‌ உயிரோடு இருக்கும் போதே நியமனம்‌ செய்து கொள்ளலாம்‌.

Vignesh

Next Post

கவனம்...! திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம்...! ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்...! காவல்துறை அதிரடி...!

Sun Nov 6 , 2022
சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதில் 12,625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70,46,196 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 42,78,808 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4,728 […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like