எஸ்.வி.சேகர் 1980களில் தமிழ்த் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகர். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர் தற்போது அங்கு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சென்னையில் உள்ள இஎம்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது :இன்று காலை அடிக்கடி ஏற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது, நான் குணமடைந்து வீடு திரும்ப விட்டேன்.
இப்போது, நான் முழுமையாக ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறேன். தினமும் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த முறை ஆயில் மசாஜ் செய்ய கட்டணம் இல்லை என்றும் மேலும் உங்களின் பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி என்று கூறியுள்ளார்.