fbpx

“அஜித்தை பார்த்துகிட்டே இருப்பேன்… திருமணதிற்கு பிறகு தான் அஜித் இப்படி மாறிட்டார்.” பிரபல நடிகை அளித்த சுவாரசிய தகவல்..

ஆந்திராவை சொந்த ஊராக கொண்டவர் தான் பிரபல நடிகை மந்த்ரா. இவர் தனது 6வயதில் தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக  நடிக்க ஆரம்பித்தார். மேலும், தெலுங்கு படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் 1996ம் ஆண்டு, “பிரியம்” என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பிரியம் படத்தில், இவருடன் அருண் விஜய் நடித்திருப்பார். இதையடுத்து, விஜய்யுடன் லவ் டுடே’, அஜித்துடன் ‘ரெட்டை வயசு’, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கொண்டாட்டம்” போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

என்னதான் இவர் முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்தாலும், இவரால் முன்னணி நடிகையாக தமிழில் உயர முடியவில்லை. ஆனால் இவர் தெலுங்கில் ஏராளமான குடும்ப பாங்கான படங்களில் நடித்து, பல்வேறு விருதுகளை பெற்றார். பிரபல டைரக்டரான ஸ்ரீமுனி என்பவரை கடந்த 2005ல் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணதிற்கு பிறகு, சினிமாவை விட்டு ஒதுங்கயிருந்த இவர், கடந்த 2013ம் ஆண்டு முதல் மீண்டும் சில படங்களிலும் சீரியல்களிலும், நடித்து வருகிறார்.

இந்நிலையில் மந்த்ரா, பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, “அஜித் ரொம்ப ஜோவியலாக பேசுவார். ரெட்டை ஜடை வயசு ஷூட்டிங்கின் போது, ஃப்ரீ டைம் கிடைத்தால் அவர் எனது பெற்றோருடன் சீட்டு விளையாடுவார். அப்போது யாரிடமும் பேசமாட்டேன், நான் ரொம்ப அமைதியான டைப். என்னுடனேயே அம்மா, அப்பா இருவருமே இருப்பார்கள். ஆனாலும் நான் அஜித்தை பார்த்துகிட்டே இருப்பேன். அதனால, என் அம்மா, ஏன் அப்படி பார்க்குறேன்னு கேட்பாங்க. ஆனால் நான் ஒன்னுமில்லைன்னு சொல்லிடுவேன்..

ரெட்டை ஜடை வயசுக்கு பிறகு, நான் வெத்தலகொடியே பாட்டுக்கு ஆடியிருந்தேன். அப்போது அஜீத்துக்கு கல்யாணமாகி, ஷாலினியுடன் ஷூட்டிங்குக்கு வந்திருந்தார். ஆனால், அப்போது அவரிடம் அந்த ஹ்யூமர் இல்லை. ஒருவித சைலண்ட் தெரிந்தது. அப்போ அவர் ரொம்ப மரியாதைக்குரியவராக காணப்பட்டார்” என்று பேசியுள்ளார்.

Read more: “சார், எனக்கு மொத்தம் 5 புருஷன்” போலீசையே திணற வைத்த கல்யாண ராணி..

English Summary

famous actress shares her experience in acting with ajith kumar

Next Post

டேட்டிங் செயலியில் குவியும் இந்தியர்கள்.. பெண்கள் தான் அதிகமாம்..! அதென்ன Gleeden..?

Mon Jan 27 , 2025
Gleeden registers 3 Million Indian users with record 128% growth of women participants

You May Like