fbpx

பிரபல நடிகை சுனைனா கடத்தல்..? ட்விஸ்ட் வைத்த தயாரிப்பு நிறுவனம்..!! விசாரணையில் இறங்கிய போலீஸ்..!!

2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் நகுலுடன் இணைந்து நடித்தவர் நடிகை சுனைனா. இவருடைய நடிப்பில் வெளியான மாசிலாமணி, வம்சம், சில்லுகருப்பட்டி மற்றும் லத்தி உட்பட பல படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சுனைனா தற்போது அயிரா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில், டொமின் டிசில்வா இயக்கத்தில் ரெஜினா திரைப்படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய 4 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், நடிகை சுனைனாவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அத்துடன் அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவியது. அவர் கடத்தப்பட்டாரா என்பது குறித்தும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. கடந்த 6 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த நடிகை சுனைனா 5 நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியை தனது தோழிகளுடன் பார்த்தது குறித்து புகைப்படங்கள், வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு நடிகை சுனைனா குறித்து சமூக வலைதளத்தில் அவர் எந்தவித பதிவும் இல்லை. நடிகை சுனைனா காணாமல் போனதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து சென்னை போலீசார் எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். குறிப்பாக அவர் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் பகுதிகளில் இருந்ததாக கிடைத்த தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அவர் நடித்த பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நடிகை காணாமல் போனதாக வெளியான வீடியோ அவர் நடிப்பில் வெளிவர உள்ள ரெஜினா என்கிற திரைப்படத்திற்கான பட ப்ரமோஷன் என்பது தெரியவந்துள்ளது. ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு தயாரிப்பு நிறுவனம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் இதுவும் ஒரு வகையான விளம்பரமே. ஒரு நடிகை காணவில்லை என வீடியோ தயாரித்து அதை உண்மை போல் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அந்த வீடியோ உண்மை என நம்பி ரெஸ்க்யூ சுனைனா என்கிற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இதனால் காவல்துறையினர் விசாரணை நடத்தும் அளவிற்கு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Chella

Next Post

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த மனைவியை…..! கடற்கரைக்கு அழைத்துச்சென்று கொலை செய்த கணவன் ஆந்திரா அருகே பயங்கரம்…..!

Sun May 21 , 2023
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கொத்தவலசு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரவாணி(27) என்ற பெண்மணி இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி தன்னுடைய கணவரை இவர் பிரிந்து வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் தான் கோபால் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்பு கோபாலுடன் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் சில கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இவர் விசாகப்பட்டினம் […]

You May Like