fbpx

பிரபல பாலிவுட் இயக்குனர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. ஐசியூவில் தீவிர சிகிச்சை…

பாலிவுட் இயக்குனர் சவான் குமார் தக் உடல்நிலை மோசமானதை அடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

சவான் குமார் தக் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது இதயம் சீராக செயல்படவில்லை என்பதால் அவருக்கு ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் அவர் இந்த கடினமான நேரத்தை கடக்க ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பிரார்த்தனைகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..

சௌதென், சனம் பெவாஃபா, ஹவாஸ், கோம்தி கே கினாரே, சாஜன் பினா சுஹாகன் போன்ற படங்களை சவான் குமார் தக் இயக்கி உள்ளார்.. மேலும் தான் இயக்கிய படங்களில் மிகவும் பிரபலமான சில பாடல்களை அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

வழக்கறிஞர்கள் போராட்டம் எதிரொலி: 2 போலி வழக்கறிஞர்களை கைது செய்த போலீசார்..!

Thu Aug 25 , 2022
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள ஆத்துப்பட்டி பகுதியைச் சோந்தவா் கலைச்செல்வன். இவரது  மகன் அலெக்சாண்டா்( 30). வடமதுரை அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி பகுதியை யைச் சோந்தவா் சாமிவேல். இவரது மகன் ஜோதிமுருகன் (35). இவா்கள் இருவரும் வழக்கறிஞா்களாக பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் இவரும் வழக்கறிஞா் பட்டம் பெறாமல் முறைகேடாக வழக்கறிஞா் தொழிலில் ஈடுபட்டு வருவதாக திண்டுக்கல் வழக்கறிஞா்கள் சங்கத்தின் இணைச் செயலா் பாண்டியராஜன் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் […]

You May Like