பிரபல பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் இன்று அதிகாலை காலமானார்.. அவருக்கு வயது 68.
பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.. அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டதாகவும், அவரது பொட்டாசியம் அளவு வெகுவாகக் குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிகிறது.. இந்நிலையில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் அவரின் உயிர் பிரிந்தது.. அவரது மறைவு செய்தி பாலிவுட்டில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
இயக்குனர் பிரதீப் சர்க்கார் பல பாலிவுட் வெற்றி திரைப்படங்களை இயக்கி உள்ளார்.. ராணி முகர்ஜியின் மர்தானி (2014) மற்றும் சைஃப் அலி கான் மற்றும் வித்யா பாலன் நடித்த பரினீதா (2005) ஆகிய படங்களை உதாரணமாக சொல்லலாம்.. பிரதீப் சர்க்காரின் முதல் பாலிவுட் படம் பரினீதா. சைஃப், வித்யா, சஞ்சய் தத், தியா மிர்சா உள்ளிட்ட பலர் அதில் நடித்திருந்தனர்.. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, திரைப்படத் தயாரிப்பாளர் லாகா சுனாரி மே தாக் என்ற படத்தை இயக்கினார். ஜெயா பச்சன், ராணி முகர்ஜி, அபிஷேக் பச்சன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் அக்டோபர் 12, 2007 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
பின்னர் 2014-ல் மர்தானி என்ற படத்தை பிரதீர் சர்க்கார் இயக்கினார்.. இது 2014 இன் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகும். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் கஜோல் நடித்த ஹெலிகாப்டர் ஈலா என்ற படத்தை இயக்கினார்.. பல திரைப்படங்களை இயக்கிய பிறகு, தனது முதல் வலைத் தொடரான கோல்ட் லஸ்ஸி அவுர் சிக்கன் மசாலா என்ற வெப் சீரிஸை இயக்கினார்.. இது 2019 இல் வெளியிடப்பட்டது. அவர் கடைசியாக துரங்க என்ற வெப் சீரிஸ்ஸில் முதல் இரண்டு அத்தியாயங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.