கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி. சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜெயம் ரவி கல்லூரி படிக்கும்போது ஆர்த்தி என்பவரை காதலித்தார். பிறகு வீட்டு சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆரவ், ஆயான் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆரவ் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார். இவரது மனைவி ஆர்த்தியின் தாயார் சுஜாதார் ஒரு தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண வாழ்க்கையும் சுமூகமாக போய்க்கொண்டிருக்க கடந்த சில நாட்களாகவே இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் ரவியின் மனைவியோ அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக; ஜெயம் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி போஸ்ட் ஒன்றை போட்டிருந்தார். அதேசமயம், தனது இன்ஸ்டாகிராமிலிருந்து ஜெயம் ரவியுடன் தான் இருக்கும் புகைப்படங்களை டெலிட்டும் செய்தார்
அதனைத்தொடர்ந்து, இருவரும் விவாகரத்து பெற போவதாக தகவல்கள் இணையத்தில் கசிந்தது. இந்நிலையில், ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார். அவர் கூறுகையில், “ஆர்த்தி பணக்கார பெண் என்பதால் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, பப்புக்கு போவது, அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வது என ஜாலியாக இருப்பார்.
திருமணத்துக்கு பின்னரும் இது தொடர்ந்தது. ஆர்த்தியின் நடவடிக்கைகள் ஜெயம் ரவிக்கு பிடிக்கவில்லை. ரவி வெளியூர் சென்றாலும் அவரின் உதவியாளரிடம் இப்போது யாருடன் அவர் தங்கி இருக்கின்றார் எனக் கேட்பாராம் ஆர்த்தி. இவ்வாறு மனைவி தன்னை சந்தேகப்படுவது ஜெயம் ரவிக்கு அதிக கோபத்தை ஏற்படுத்திருக்கலாம்” என்றார்.
அதனைத்தொடர்ந்து , ஆர்த்தியின் அம்மா சுஜாதா சின்னத்திரை தொடர்கள் மற்றும் சினிமாக்களை தயாரித்துள்ளார். ரவியை வைத்து ஒரு சில படங்களை தயாரித்தார். அதில் சைரன் படம் மட்டுமே அவருக்கு ஓரளவு லாபத்தை கொடுத்தது. ஒரு முறை, ரவியின் சம்பள விவகாரத்தில் பிரச்சனை இருந்தது. அதாவது எனக்கு 25 கோடி சம்பளம் வேண்டும் என ரவி கேட்க, அவ்வளவு மார்க்கெட் உங்களுக்கு இல்லை என சுஜாதா சொல்லி விட்டாராம். அதன் பிறகு அந்த படத்திற்கு விஜய் சேதுபதியை ஓகே செய்துவிட்டாராம்.
இதனால் கோபப்பட்ட ஜெயம் ரவி மாமியாருடன் சண்டை போட இது ஈகோவாக மாறி பிரச்சனையாகி விட்டது. ஆர்த்தி அம்மாவுக்கு சப்போர்ட் செய்ய, இந்த விஷயம் விவாகரத்து வரை போய் உள்ளது. அதனாலயே ரவியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்தார் என பயில்வான் மீண்டும் ஒரு சில தகவல்களை சொல்லியுள்ளார் என்றார்.