fbpx

இந்தாண்டில் 1.5 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய பிரபல ஐடி நிறுவனங்கள்..!! ’ஆனா இலக்கை இன்னும் தொடல’..!!

Infosys, Wipro, TCS, HCL ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டின் முதல் பாதியில் 1,05,000 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளன.

முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ஹெசிஎல் ஆகியவை இந்த ஆண்டில் இதுவரை 1,05,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், இந்த நிறுவனங்கள் மொத்தம் 1.57 லட்சம் பேரை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ஆண்டு பணியமர்த்தல் 30% க்கும் அதிகமாக வீழ்ச்சியடையும். மார்ச் 2023-க்குள், HCL நிறுவனம் 30,000-க்கும் மேற்பட்ட புதியவர்களை பணிக்கு அமர்த்த வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்நிறுவனம் 16,000 பேரை பணியில் சேர்த்துள்ளது.

இந்தாண்டில் 1.5 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய பிரபல ஐடி நிறுவனங்கள்..!! ’ஆனா இலக்கை இன்னும் தொடல’..!!

இதேபோல், இன்ஃபோசிஸ் நிறுவனம் 40,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளது. இந்த ஆண்டிற்குள் 50 ஆயிரம் பேரை பணியமர்த்த இலக்கி நிர்ணயித்துள்ளது. மறுபுறம், விப்ரோ நிறுவனம் இந்த நிதியாண்டில் 14,000 பேரை வெற்றிகரமாக பணியில் அமர்த்தியுள்ளது. ஆனால், இந்நிறுவனத்தின் இலக்கு 30,000 பேர். இதற்கிடையே, டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 35,000 புதியவர்களை பணியமர்த்தியது. இந்தாண்டில் 47,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்தாண்டில் 1.5 லட்சம் பேரை பணிக்கு அமர்த்திய பிரபல ஐடி நிறுவனங்கள்..!! ’ஆனா இலக்கை இன்னும் தொடல’..!!

ஆனால், சில நாட்களுக்கு முன்பு, விப்ரோ, டெக் மஹிந்திரா போன்ற மற்ற நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தள்ளிவைத்துள்ளன. மேலும், நிறுவனங்கள் அறிவிக்கும்வரை காத்திருக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

Chella

Next Post

தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்..!!

Tue Oct 18 , 2022
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கேள்வி நேரத்துடன் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்ககோரி அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கமிட்டனர். அப்போது, பேரவைக்கு முரண்பாடாக செயல்படுவதாக கூறி அவர்களை பேரவைத் தலைவர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர், அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் […]
’இபிஎஸ் வாழ்க’..!! முழக்கமிட்ட முன்னாள் அமைச்சர் விரட்டி அடிப்பு..!! பசும்பொன்னில் பரபரப்பு..!!

You May Like