fbpx

பிரபல தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை..

நடிகை தீபா சென்னையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரபல நடிகை தீபா தமிழில் சமீபத்தில் வெளியான வாய்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.. இந்த நிலையில் நேற்று முன் தினம், சென்னை விருகம்பாக்கம் மல்லிகா அவென்யூவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.. 29 வயதான அவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்.

தனது வீட்டில் தீபா தனியாக வசித்து வந்த நிலையில்உறவினர்கள் போன் செய்தும் அவர் போன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. இதனால், தீபாவின் நண்பர் பிரபாகரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​தீபா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து தீபாவின் சகோதரர் சித்தூரில் இருந்து சென்னை வந்து போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது உடல் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடிகை தீபா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் அனைத்து தரப்பிலிருந்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் தீபாவின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

மேலும், இது தற்கொலையா அல்லது யாரேனும் அவரை தற்கொலைக்கு தூண்டினார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது, அதில் மன உளைச்சல் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது மரணத்திற்கும் யாரும் காரணமில்லை என்றும் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..

Maha

Next Post

எடப்பாடியை தோற்கடித்த சுப்புலட்சுமி ஜெகதீசன்..! யார் இவர்..? திமுகவிலிருந்து திடீரென விலகியது ஏன்?

Tue Sep 20 , 2022
துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”2009இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக்காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். கலைஞர் மறைவுக்குப் பின் அவர்களின் விருப்பத்தின்படி முக.ஸ்டாலின் […]
எடப்பாடியை தோற்கடித்த சுப்புலட்சுமி ஜெகதீசன்..! யார் இவர்..? திமுகவிலிருந்து திடீரென விலகியது ஏன்?

You May Like