fbpx

உலகக்கோப்பையில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து, அனல் பறக்க போகும் போட்டிகள்..!

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை  சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட உள்ளது. உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் நடைபெற உள்ள 5 போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்தியா – பாகிஸ்தான்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியை காட்டிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டி என்றால், இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற உள்ள லீக் போட்டி தான். இரு அணிகளும் அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் மோத உள்ளன. கடந்த முறை இவ்விரு அணிகளும் உலகக்கோப்பை போட்டியில் மோதியபோது, ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவிக்க, இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து – நியூசிலாந்து: கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் பவுண்டரிகளின் அடிப்படையில் நியூசிலாந்தை வீழ்த்தி, இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றதை யாராலும் மறக்க முடியாது. தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இதனால், இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் எப்போதுமே சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற நிலையில் அதற்கு பழிவாங்குமா என்ற முனைப்பில் இந்த போட்டியை ரசிகரகள் எதிர்பார்த்துள்ளனர். 

ஆஸ்திரேலியா – தென்னாப்ரிக்கா: கடந்த உலகக்கோப்பை தொடரில் டூப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்ரிக்க அணி, வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில், லீக் சுற்றில் அந்த அணி விளையாடிய கடைசி போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தென்னாப்ரிக்கா அணியில் டூப்ளெசிஸ் விளையாடுவாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான்:
நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்ற அணிகளில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஆப்கானிஸ்தான் அணி தான். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற நட்சத்திர அணிகளை பின்னுக்கு தள்ளி, நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டி அக்டோபர் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. 

Maha

Next Post

தானியங்கி-ஆக இயங்கும் டெஸ்லா, எங்க போகணும்னு சொன்னா மட்டும் போதும்..!

Tue Jun 27 , 2023
மின்சார வாகன தயாரிப்புக்கு பெயர்பெற்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக அந்நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். விலை உயர்ந்த டெஸ்லா மின்சார வாகனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சொகுசு என்ற சொல்லுக்கு ஏற்றார் போல், ஆட்டோ பைலட் முறையில் செல்லும் இடத்தின் விவரத்தை பதிவிட்டால் போதும், டெஸ்லா கார் தானியங்கியாக செயல்பட்டு நாம் செல்ல வேண்டிய […]

You May Like