fbpx

டி20 உலகக் கோப்பையில் இருந்து  வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

ந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த  அனுபவம் மிக்க பவுளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாட பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகினார். மீதம் உள்ள டி20 போட்டிகளில் அவர் விளையாடுவாரா என எதிர்பார்த்த நிலையில், ஜாஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 தொடர் உலக கோப்பையில் இருந்தும் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஜாஸ்பிரித் பும்ரா முதுகு தண்டுவடத்தில் பிரச்சனையால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியிருந்ததும், தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் விலகியதாக கூறப்பட்ட வரும் செய்தி ரசிகர்களை மட்டுமல்லாது.  இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை கேள்விக் குறியாக்கி உள்ளது.

இதனிடையே  ரவீந்திர ஜடேஜாவும் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார். தற்போது நடைபெற்று வரும் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து ஜாஸ்பிரித் பும்ரா வெளியேறியதால் அவருக்கு மாற்றாக  முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் ஜாஸ்பிரித் பும்ரா விலகினால் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என  கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Next Post

கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதி: வரும் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றது…

Thu Sep 29 , 2022
வரும்  1-ம் தேதியில் இருந்து  கிரெடிட் கார்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளபுதிய விதிகள்அமலுக்கு வரவுள்ளது. ஏற்கனவே இந்தி விதிகள் அமல்படுத்தப்பட இருந்தது  ஏப்ரல் மாதம் அமல்படுத்த இருந்த விதிமுறைகள் தாமதமாக வெளியிடப்படுகின்றது. கிரெடிட் கார்டு லிமிட் அனுமதி, கிரெடிட் கார்டு டோக்கனைசேஷன் மற்றும் கார்டை ஆக்டிவேட் செய்ய கார்டு வழங்குநர் ஓடிபி எண்ணை பயனர்களிடம் கேட்பது போன்றவை முக்கிய விதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி கிரெடிட் கார்டுகளை […]

You May Like