மகாராஷ்டிராவில் காலரா நோய் பாதிப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்தனர்..
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது.. கடந்த 7ம் தேதி அமராவதி மாவட்டத்தில் உள்ள சிக்கல்தாரா மற்றும் அமராவதி தொகுதிகளில் காலரா நோய் பரவியது. சிக்கல்தாரா தொகுதியில் உள்ள மூன்று கிராமங்களிலும் (டோங்ரி, கொய்லாரி மற்றும் கானா) அமராவதி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்திலும் (நயா அகோலா) காலரா பரவி உள்ளது.. இந்நிலையில் மகாராஷ்டிராவில், காலரா நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 181-ஆக அதிகரித்துள்ளது..
அமராவதி காலரா நோய் பாதிப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குவர். இந்த நோயாளிகளில் மூவர் 24 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இருவர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மருத்துவக் குழுக்கள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன, மேலும் தண்ணீரின் தர கண்காணிப்பு, நோயாளிகளின் கண்காணிப்பு, மேலாண்மை மற்றும் சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
காலரா நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கவும் மாநில அளவிலான குழு தற்போது மாவட்டத்தில் உள்ளது. கூடுதல் சுகாதார செயலாளர் (பொது சுகாதாரம்) வெடிப்பு நிலைமையை விரிவாக ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அமராவதி மாவட்ட நிர்வாகத்தின் முதன்மை செயல் அதிகாரிக்கு தொற்றுநோய் தடுப்பு குறித்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.