fbpx

ஹெலிகாப்டரை விட வேகமானது!… இந்தியாவில் மின்சார பறக்கும் டாக்சிக்கு DGCA ஒப்புதல்!

பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்ததையடுத்து மின்சார பறக்கும் டாக்சி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

IIT மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமான “தி இபிளேன் கம்பெனி” இந்த அசாதாரண திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வெற்றிகரமான முயற்சிகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, ePlane e200 விமானத்திற்கான பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) ஒப்புதலையும் பெற்றுள்ளனர். மின்சாரத்தில் பறக்கும் இந்த டாக்ஸி ஹெலிகாப்டரை விட வேகமானது. இதன் மூலம் பயணிகள் ஒரு தனித்துவமான அனுபவத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பறக்கும் டாக்சியின் வடிவமைப்பு பெங்களூருவில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. அப்போதே பலரின் கவனத்தையும் ஈர்த்தது இந்த இ-பிளேன். இந்தியாவின் முதல் மற்றும் உலகின் கச்சிதமாக பறக்கும் மின்சார டாக்சியை உருவாக்குவதே இபிளேன் நிறுவனத்தின் நோக்கமாகும். இது நகர் பகதிகளில் பயணிகள் மற்றம் சரக்கு போக்குவரத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு மற்ற போக்குவரத்து வாகனங்களோடு ஒப்பிடுகையில் பத்து மடங்கு வேகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதற்கான முயற்சியின் முதல் படியாக இபிளேன் நிறுவனம் டிஜிசிஏ-வின் ஒப்பதலைப் பெற்றுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் டிஏஓ என்னும் அமைப்பு ஒப்புதல் சான்றை இந்த நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஒப்புதல் வழியாகத் தான் செங்குத்தாக ஏறி இறங்கும் (eVOTL)விமானங்களை தயாரிக்க முடியும். அதன் அடிப்படையில் இ200 என்ற பெயரில் இரண்டு பேர் அமரக்கூடிய வகையில் பறக்கும் மின்சார டாக்சியை தயாரிக்கும் முதல் படியில் இபிளேன் நிறுவனம் காலடி எடுத்து வைத்துள்ளது.

இது தங்கள் நிறுவனத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார் இபிளேன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்தியநாராயணன். டிஏஒ ஒப்புதல் மூலம் எங்கள் நிறுவனம் மின்சார டாக்சிகளைஆகாயத்தில் பறக்க அனுமதிப்பதில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்துள்ள தரத்தைப் பூர்த்தி செய்வதற்கான தரத்தை குறிக்கும் ஒன்றாகும் என்றும், விரைவில் தரமான, பாதுகாப்பான மற்றும் சற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பறக்கும் மின்சார டாக்சிளை தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடு உள்ளோம் என்றும் சத்தியநாராயணன் கூறியுள்ளார்.

Kokila

Next Post

நாட்டை உலுக்கிய ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட பயணிகளுடன் சென்னை வந்த சிறப்பு ரயில்...!

Sun Jun 4 , 2023
ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் […]

You May Like