fbpx

இராணிப்பேட்டை: நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது வெடித்து தந்தை பலி..! 

ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் உள்ள ஆற்காடு கிளைவ் பஜார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் தனது மனைவி செல்வி மற்றும் பகவதி, ஏசுராஜா என்ற 2 மகன்கள், குஷ்பூ என்ற மகளுடன் வசித்து வருகிறார். 

நேற்றைய தினத்தில் முருகன் மற்றும் மகன் பகவதி ஆகியோர் பன்றிகளை வேட்டையாட வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு சட்டென்று வெடித்துள்ளது.

இவ்வாறு நடந்த வெடிவிபத்தில் தந்தை மற்றும் மகன் இருவருமே படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மருத்துவமனையில் முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அத்துடன்  மகன் பகவதியை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

பகவதிக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

உணவில் போதை மருந்தை கலந்து பாலியல் பலாத்காரம் செய்த மேலாளர்..!

Fri Jan 13 , 2023
ஹரியானா மாநில பகுதியில், குருகிராமில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார்.  இவர் தனது சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக, நிறுவன மேலாளர் அழைத்ததன் காரணமாக ஒரு மாலுக்கு சென்றுள்ளார். மாலுக்கு வெளியே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது அந்த பெண்ணிற்கு உணவு வாங்கி கொடுத்த மேலாளர், உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்ததாக தெரிகிறது.  இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]

You May Like