தமிழகத்தில் 755 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டது.
இந்தியாவில் 2017 மற்றும் 2021 க்கு இடையில் 6,677 NGO-களின் FCRA பதிவு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் எழுத்து பூரவமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறுகையில், என்ஜிஓக்களின் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010ன் கீழ், விதிகளை மீறியதற்காக பதிவு ரத்து செய்யப்பட்டது.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பதிவு ரத்து செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதிவு செய்யவோ அல்லது முன் அனுமதி வழங்கவோ தகுதி இல்லை என்றார்.தமிழகத்தில் மட்டும் அதிகப்படியாக 755 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 734 NGO-களும், உத்தரபிரதேசத்தில் 635, ஆந்திராவில் 622 மற்றும் மேற்கு வங்கத்தில் 611 பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.