fbpx

1 வயது குழந்தையை சுமந்து கடமையை செய்யும் பெண் கான்ஸ்டபிள்!. குவியும் பாராட்டுகள்!

RPF Constable: டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள், சனிக்கிழமை இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர். இதில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.

Readmore: உஷார் மக்களே.. கிரெடிட் கார்டு அப்ளை செய்து தருவதாக கூறி நூதன மோசடி..!! பல லட்சம் அபேஸ்..!

English Summary

Female constable carries 1-year-old baby while on duty!. Accumulating praise!

Kokila

Next Post

பணியிடத்தில் மன அழுத்தம்.. மன ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்..? - நிபுணர்கள் விளக்கம்

Tue Feb 18 , 2025
Workplace Stress Is it work stress? If you do this.. Ugh!

You May Like