fbpx

பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை!. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!.

Rape: கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள கருத்தரங்கு அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் அரை நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலில் பலாத்கார காயங்கள் இருந்தன. பிரேதபரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று இந்த கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜூனியர் மருத்துவர்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. இடதுசாரி மாணவர் அமைப்பினரும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா உறுதி அளித்தார்.

Readmore: நோட்..! நவம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை… ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்…!

English Summary

Female doctor raped and killed! Students jumped into protest!

Kokila

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் ரூ.1000 திட்டம்...! விண்ணப்பிக்க இந்த ஆவணங்கள் முக்கியம்..?

Sun Aug 11 , 2024
1000 scheme of Tamil Nadu government for government school students

You May Like