அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த பெர்னாண்டோ டிரஸ் அல்காபா என்பவர் க்ரிப்டோ கரன்சி பயன்பாட்டின் மூலமாக பல கோடி ரூபாயை குவித்த நபர் ஆவார் தற்போது பலர் கிரிப்டோகரன்சியின் மூலமாக கோடிக்கணக்கு ரூபாயில் சம்பாதித்து வருவது எல்லோரும் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் தான். இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்னர் பெர்னாண்டோ திடீரென்று காணாமல் போனார்.
சென்ற ஒரு வார காலமாக காணாமல் போயிருந்த அவர், கடந்த புதன்கிழமை மிகவும் பயங்கரமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று வழங்கிய தகவலின் அடிப்படையில், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இருக்கின்ற நீரோடைக்கு அருகே ஒரு சூட்கேஸில் பெர்னாண்டோவின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்த ஓடையில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகள் அங்கு கிடந்த சிவப்பு நிற சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அந்த சூட்கேசில் பெர்னாண்டோவின் கால்கள் மற்றும் கைகள் இருந்த நிலையில், அவருடைய மற்றொரு கை ஓடையின் வேறு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இவர் கடந்த 19ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் சென்ற பின்பு காவல்துறையினர் கடந்த புதன்கிழமை அவருடைய தலை மற்றும் உடற்பகுதியை கண்டுபிடித்து இருக்கின்றன. உடல் வெட்டப்பட்டிருப்பதை வைத்து இது கைபேந்த ஒரு நபரால் தான் வெட்டப்பட்டு இருக்கிறது. என்று காவல்துறையினர் கூறியிருக்கின்றனர். அவருடைய உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில் அவர் உடல் வெட்டப்பட்டதற்கு முன்னதாக அவர் 3 முறை துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து கடந்த 19ஆம் தேதி அந்த இடத்தை காலி செய்வதாக பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அன்றைய தினம் வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வீட்டின் சாவியை கொடுக்க வரவில்லை. ஆகவே அந்த வீட்டின் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் அவருடைய மரணம் குறித்து காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரை எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.