திருச்சி மாவட்ட பகுதியில் முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்திற்கு அருகே சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அந்த சத்தத்தினை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரத்திற்கு சென்று பார்த்தபோது, பிறந்து சிறிது மணிநேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு கிடந்துள்ளது.
இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவிய நிலையில், இதனையடுத்து அந்த குழந்தையை பார்க்க ஏராளமானோர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் குழந்தையை வீசி சென்றது யார் என்று, குழந்தையை யாராவது கடத்தி சென்ற நிலையில் வீசி உள்ளரா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.