சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசு நிர்வாக தரப்பில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி நிலவரப்படி, தங்களது சொத்துப் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை ஏராளமான அரசு ஊழியர்கள் தங்களது சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாததால், துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரள அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் மென்பொருள் தளத்திலேயே, சொத்துப் பட்டியலை தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும். பல அரசு ஊழியர்கள் தங்களது சொத்துப் பட்டியலை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கேரள அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யவில்லை என்றால், பணியிட மாற்ற கோரிக்கைளை நிராகரிப்பு மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.