மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டிற்கு கலவையான வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், “பட்ஜெட் விவகாரத்தில் நிதியமைச்சரைக் குற்றம் சொல்வது தவறு. இந்த பட்ஜெட் பிரதமர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால், அந்த முட்டாள்கள் ஒரு அடையாளத்திற்காக நிர்மலாவிடம் கொடுத்துவிட்டனர். அவர் ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் மாணவர். அதாவது, அவருக்கு ஆடவும் பாடவும் மட்டுமே தெரியும்” என்று விமர்சித்துள்ளார்.
வெளிப்படையான ஆளுமைக்கு பெயர் பெற்ற பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நிதியமைச்சர் சீதாராமனை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சி குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு எதிராக சுவாமி கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.
Read more ; சுனிதா வில்லியம்ஸ் விரைவில் நாடு திரும்புவார்..!! – நாசா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு