அரசுப் பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கான நிதி ஆதாரம் தொடர்பாக நிதியமைச்சருடன் கல்வித் துறை அமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் கொடுக்கும் திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட வருகிறது. 2020-21ம் ஆண்டில் 11ம் வகுப்பு படித்த 4 லட்சத்து 97 ஆயிரத்து 028 மாணவர்களுக்கு தர வேண்டிய லேப்-டாப்கள் இன்னும் மாணவர்களுக்கு தரப்படவில்லை. மேலும் 2017 -18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயமுத்தூர், ஈரோடு,காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர்,சேலம், தேனி ஆகிய எட்டு மாவட்டங்களில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற மாவட்டங்களில் பயின்ற மாணவர்களில் தற்போது உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிலும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் அத்தாட்சி அடிப்படையில் லேப்-டாப்கள் வழங்குவதற்கு அரசாணை பிறபிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆண்டு 11-ம் வகுப்பு பயின்ற 49,7028 மாணவர்களுக்கு கொடுக்கவேண்டிய லேப்-டாப்கள் இன்னும் வழங்கப்கப்படவில்லை.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கான நிதி ஆதாரம் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதே போல அரசுப்பள்ளிகளில் புதிதாக கட்டப்பட வேண்டிய கட்டடங்கள், காலிப் பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்தல், புதிய வாகனங்கள் கொள்முதல் போன்றவற்றுக்கு தேவையான நிதி ஆதாரம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.