அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தி நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
சிறுசேமிப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை உயர்த்தி தமிழக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
இபிஎஃப்ஒ இணையதளத்திலிருந்து இ- பாஸ்புக் பதிவிறக்கம் செய்துள்ள முடியும். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டும்தான் பாஸ் புத்தகத்தை டவுண்லோடு செய்ய முடியும். உறுப்பினர்கள் பதிவு செய்த 6 மணி நேரத்தில் பாஸ்புக் பதிவிறக்கம் செய்யலாம். இதில் ஒவ்வொரு மாதமும் உங்களின் பிஎஃப் தொகை எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான வட்டி எவ்வளவு என அனைத்து விதமான பரிவர்த்தனைகளும் இதில் இருக்கும்
ஆன்லைனில் இருப்பைச் சரிபார்ப்பது எப்படி…?
ஆன்லைன் மூலம் உங்கள் இருப்பைச் சரிபார்க்க, epfindia.gov.in என்ற இணையதளத்தில் உள்நுழைந்து இ-பாஸ்புக் என்பதை கிளிக் செய்யவும். பின்னர் passbook.epfindia.gov.in என்னும் பக்கத்திற்கு உங்களை எடுத்து செல்லும். அதில், உங்கள் பயனர்பெயர் (UAN எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும். அடுத்து நீங்கள் ஒரு புதிய பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள், இப்போது நீங்கள் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுத்த பின்னர் இ-பாஸ்புக்கில், உங்கள் EPF இருப்பைக் காணலாம்.