ஈரோடு மாவட்டம் உடையார்பாளையத்தில் மஞ்சுளா – சரவணன் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 8ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகள், அவர்களது தாத்தா – பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இரண்டாவது மகள் அக்ஷயா 5ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தனது மகளிடம் தாய் மஞ்சுளா வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர், வேலை முடிந்து வழக்கம்போல, மாலை அவர் வீட்டிற்கு வந்தபோது சமையல் அறையில் அக்ஷயா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனைப் பார்த்து பதறிப்போன தாய், அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களது உதவியுடன் மருத்துவமனைக்கு அக்ஷயாவை கொண்டுச் சென்றார்.
ஆனால், மருத்துவர்கள் அக்ஷயாவை பரிசோதித்து விட்டு, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாய் வீட்டு வேலை செய்ய சொல்லியதால் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Read More : BREAKING | கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பலாத்கார வழக்கு..!! குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை..!!