fbpx

இனிமேல் எதுக்காகவும் பட்டாசு வெடிக்கக்கூடாது!… விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அரசு!

எந்த ஒரு அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நாட்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இப்பொழுதே பட்டாசுகள் விற்பனை ஆங்காஙே கலைகட்டத் தொடங்கியுள்ளது. சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு பட்டாசுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக பல இடங்களில் பட்டாசு வெடிவிபத்துகளும் அதிகளவில் நிகழ்கின்றன. அதன் ஒருபகுதியாக கடந்த 2 நாட்களுக்கு முன் தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் 14 பேர் உடல் கருகி பலியாகினர். இந்தநிலையில், பட்டாசு வெடிக்க கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ பட்டாசுகள் வெடிப்பது வழக்கமான ஒன்று தான். இனிமேல் கர்நாடகா முழுவதும் எந்த ஒரு அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் உள்ளிட்ட நாட்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்க விரும்பும் மக்கள், பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மேலும் விற்பனையாளர்கள் மாநிலம் முழுவதும் பசுமை பட்டாசுகளையே விற்பனை செய்ய வேண்டும். இதை தவிர்த்து வேறு பட்டாசுகளை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

புதிய விதிமுறைகள்! வாகன ஓட்டிகளிடம் கோபமாக பேசக்கூடாது!… டோல்கேட் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!...

Wed Oct 11 , 2023
டோல்கேட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பல வாகனங்கள் வந்து செல்கின்றனர். வாகனம் அதிகமாக வருவதால் அடிக்கடி சண்டைகளும் அதிகமாக வருகிறது. அதனை சரி செய்ய இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பயணிகள் மற்றும் சுங்கச்சாவடி ஆபரேட்டர்களின் பாதுகாப்பிற்காக புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது சுங்கச் சாவடிகளில் பாதுகாப்பை மேம்படுத்த ஒரு நிலையான இயக்க […]

You May Like