அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது பயங்கரவாத தாக்குதலா என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக் பரவி வருகிறது.
அதில் டிரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலின் நுழைவாயிலில் டெஸ்லா சைபர்ட்ரக் வெடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சொகுசு ஹோட்டலுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைபர்ட்ரக் ஒன்று தீப் பந்தாக மாறியதையும், சில நொடிகளில் டிரக் தீயில் எரிந்ததையும் காணமுடிந்தது. விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை..
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து டெஸ்லாவின் உயர் அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடந்து வருகிறது. முன்னதாக, நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் தெருவில் புத்தாண்டு 2025 கொண்டாட்டத்தின் போது வேகமாக வந்த கார் கூட்டத்தின் மீது மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என விசாரணையில் தெரியவந்தது.
Read more ; சைபர் குற்றங்களுக்கு ’வாட்ஸ் அப்’தான் டார்கெட்!. உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!