ஹைலேண்ட் பார்க் என்ற சிகாகோ புறநகர் பகுதியில் ‘ஜூலை நான்காம் தேதி சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர்..
அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.. பள்ளிகள், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையங்கள் என பல இடங்களில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.. அந்த வகையில் மே 14 அன்று ஒரு மளிகைக் கடையில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதே போல் மே 24 நியூயார்க்கில் உள்ள தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர்..
இந்நிலையில் ஹைலேண்ட் பார்க் என்ற சிகாகோ புறநகர் பகுதியில் ஜூலை நான்காம் தேதி சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர்.. 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 24 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குற்றவாளியை தேடி வருவதாகவும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..