மட்டன், சிக்கனுக்கு அடுத்தப்படியாக அசைவ பிரியர்கள் அதிகம் சாப்பிடும் உணவு என்றால் அது மீனாக தான் இருக்கும். இப்படித்தான் ஜப்பானில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற மீன் பிரியர் ஒருவர் உணவகத்தில் மீன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, ஒரு தட்டில் காய்கறிகள், நூடுல்ஸ் மற்றும் இரண்டு மீன்களை ஊழியர்கள் பரிமாறினர். அப்போது ஆசையாக சாப்ஸ்டிக்கை வைத்து மீனைத் தொட்டவுடன், மீன் வாய் திறந்து அக்குச்சியை கடித்துக்கொண்டிருப்பது போல வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை திடீரென பார்த்த நெட்டிசன்கள்.. என்ன இது மீனை உயிருடன் பரிமாறுகிறார்களா? இல்லை மறதியினால் மாற்றி எடுத்துவிட்டு வந்துவிட்டார்களா? என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
ட்விட்டர் பயனர் ஒருவர், இந்த வீடியோ நம்ப முடியாத அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் சமையல் தொழிலில் இருக்கிறேன். இதற்கு முன் என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற பொறுப்பற்ற தன்மையைப் பார்த்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், அனைவரிடமும், தயவு செய்து தங்களின் உணவு நன்கு சமைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதோடு மற்றொரு பயனர் ஒருவர், ஜப்பான் போன்ற நாடுகளில் இதுபோன்ற உணவுகள் உண்பது சகஜம் தான் எனவும் ட்வீட் செய்துள்ளார். இதே வீடியோ தான் சென்ற ஆண்டு இன்ஸ்டாவில் வெளியானபோது, நெட்டிசன்களிடம் பிரபலமான நிலையில், மீண்டும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.