fbpx

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு…! தாக்குதல் குறித்து இந்திய இராணுவம் விளக்கம்…!

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் கூறியதாவது; இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. சம்பவத்தில் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருவதாக கூறியுள்ளது.

Vignesh

Next Post

சூடான வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் கூடிய மழை...! வானிலை மையம் தகவல்...!

Fri Apr 21 , 2023
இன்று தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌; தென்‌ இந்திய பகுதிகளின்‌ மேல்‌ வளி மண்டலத்தின்‌ கீழடுக்குகளில்‌ கிழக்கு திசை காற்றும்‌, மேற்கு திசை காற்றும்‌ சந்திக்கும்‌ பகுதி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று தென்‌தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like