வரும் செப்டம்பர் 30-ம் தேதி தான் கடைசி தேதி என்பதால், கையிலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது என்று வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது, இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
மே 23 முதல் வங்கியில் மாற்றப்பட்டு வருகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் எந்த வங்கிக் கிளையிலும் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, மே மாதத்தில் 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்ததையடுத்து, ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 95 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. வரும் செப்டம்பர் 30-ம் தேதி தான் கடைசி தேதி என்பதால், கையிலுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தகவல்படி 2017-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 6,57,063 கோடி ரூபாய் மதிப்பிலான 329 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3,62,220 கோடி ரூபாய் மதிப்பிலான 181 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2023 மே 19 நிலவரப்படி 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 177.93 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. , 2023 மே 19 முதல் , 2023 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் 2.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 136.13 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது