fbpx

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. பழி தீர்க்க திட்டம் போட்ட ஆம்ஸ்ட்ராங் நண்பன் கைது..!!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் நண்பன் முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரமும் வெளியானது.

கொலையாளிகள், பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் திரைமறைவில் இருந்து மூளையாக செயல்பட்டு, திட்டமிட்டு, பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார் என்பதை கண்டறிய புலனாய்வு முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பழிக்கு பழியாக கொலை நடப்பதை தடுக்க ஆம்ஸ்ட்ராங் நண்பன் முருகேசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உழவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. அதனைத்தொடர்ந்து முருகேசன் என்பவரை போலிசார் கைது செய்தனர்.

Read more ; புதிய உறவுக்குள் நுழைகிறீர்களா..? அப்படினா மறக்காம இதை பண்ணுங்க..!!

English Summary

Following Armstrong’s murder, the police arrested Armstrong’s friend Murugesan, who had planned a revenge attack.

Next Post

’அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!

Mon Aug 12 , 2024
Health Minister M. Subramanian said that this year, tests on cancer incidence will be conducted in all districts.

You May Like