fbpx

பல்லி விழுந்த உணவு விஷமாக மாறாது!… உண்மை இதுதான்!

பல்லி விழுந்த உணவு விஷம் தானா? இல்லையா? அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பூச்சிகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவை,  விஷத்தன்மை கொண்டவை மற்றும் விஷத்தன்மை அற்றவை என குறிப்பிடப்படுகிறது. அதிலும் குறிப்பாக எந்த ஒரு பூச்சியாக இருந்தாலும், அது உணவில் விழுந்து விட்டால் ஒரு விதமான நச்சுப்பொருளை வெளியேற்றி விடுமாம். இதன் காரணமாக உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை, விஷத்தன்மை உடைய பூச்சி உணவில் விழுந்து விட்டால், அந்த உணவினை நீங்கள் சாப்பிட்டு விட்டால் தீவிர உடல் பிரச்சினை ஏற்படுவது உறுதி.

நம்மில் சிலர் பல்லியை விரும்புவார்கள். ஆனால், பலரும் பல்லியைப் பார்த்தால் அருவருப்பு மற்றும் பயம் கொள்வார்கள். உங்கள் வீடுகளில் இருக்கும் பல்லிகள் விஷத்தன்மை உடையதாக இல்லை விஷத்தன்மை அற்றதா என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல்லிகள் உணவில் விழும் சமயத்தில், அவை சிறுநீர் அல்லது மலம் கழிக்க வாய்ப்புள்ளது. இ இந்த சிறுநீர் மற்றும் மலம் நச்சுத்தன்மை அற்றதாக இருந்தாலும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. மேலும், பல நேரங்களில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுமாம். ஆனால், இதில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால், பல்லிகள் உணவில் விழுவதால், அந்த உணவு விஷமாக மாறுவதில்லை.

பல்லி அதிகமாக கழிவறை போன்ற சுத்தமற்ற இடங்களில் இருந்து வருவதனால், அதனுடைய கால்களில் நம் கண்ணுக்குத் தெரியாத பல கிருமிகள் இருக்கின்றது. பல்லி உணவில் விழும்போது இந்த கிருமிகள், உணவில் கலந்து விடுவதால், உணவு கெட்டுப் போய் விடுகிறது. இதை அறியாமல் நாம் உணவை சாப்பிட்டுவதால் வாந்தி மயக்கம் ஏற்படுகிறது.

Kokila

Next Post

இஸ்ரேலில் தனது சகோதரியை குழந்தைகள் கண்முன்னே வைத்து..!! பிரபல டிவி நடிகை சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Wed Oct 11 , 2023
ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு, பிரிட்டன் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அமைத்துக் கொடுத்தது இஸ்ரேல். தங்கள் நாட்டை பிரித்து வேறு குழுவினருக்கு வழங்குவதை பாலஸ்தீன் பூர்வ குடிகள் விரும்பவில்லை. இதனால், பல போர்கள் வெடித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் படைபலத்தை அதிகரித்த இஸ்ரேல், பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றிக்கொண்டே வந்தது. இஸ்ரேல் தனது நிலப்பரப்பை பெரிதாக்கி, பாலஸ்தீன நிலப்பரப்பு வரைபடத்திலேயே காணாமல்போகும் அளவுக்கு செய்தது. […]

You May Like