ஹீமோகுளோபின் எனப்படுவது நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்களாகும். இந்த சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை ரத்தத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும் போது வெளிறிய தோல் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
இவற்றின் எண்ணிக்கையை நமது உணவு முறையின் மூலமாகவே அதிகரித்துக் கொள்ள முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடலில் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கும் போது ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே இரும்பு சத்துக்கள் நிறைந்த இறைச்சி பால் பொருள்கள் மற்றும் ஆட்டின் ஈரல் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஹீமோகுளோபின் உற்பத்தியில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் உடலில் வைட்டமின் சி சத்து இருந்தால் தான் இரும்புச்சத்து அதிகமாக உறிஞ்சப்படுகிறது. எனவே வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிடுவது ஹீமோகுளோபின் எண்ணிக்கை பெருகுவதற்கு உதவும். வைட்டமின் பி9 இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் நிறைந்திருக்கும் பச்சை காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும் வைட்டமின் பி 12 சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யலாம். இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவதை தடுக்கின்ற உணவுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் உதாரணமாக கால்சியம் சத்து நிறைந்த பொருட்கள் டீ மற்றும் காபி போன்ற பானங்களை தவிர்த்துக் கொள்வது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு நல்லதாகும்.