குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய் பால் மட்டுமே பரிந்துரைக்கப் படுகிறது. 6 மாதத்திற்கு பிறகே, திரவ உணவுகள், அரை திட உணவுகள் என ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும். அதுவும் ஒரு புது உணவு கொடுக்கும் போது, அது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா என்பதை உறுதி செய்து கவனமாக கொடுக்க வேண்டும். அதே சமயம், குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை, அவர்களுக்கு ஒரு சில உணவுகளை கட்டாயம் கொடுக்க கூடாது. என்ன உணவுகளை எல்லாம் கொடுக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
குழந்தைக்கு இரண்டு வயது முடியும் வரை சர்க்கரை சேர்த்த எந்த உணவையும் கொடுக்க கூடாது.. அதாவது, கேக், சாக்லேட், ஸ்வீட்ஸ், ஜெல்லி போன்ற எதையும் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. அவர்கள் இது போன்ற இனிப்பு சுவையை பழகி விட்டால் மற்ற சுவைகலான கசப்பு, புளிப்பு ஆகியவற்றை சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது அவர்களுக்கு நல்லது அல்ல. நீங்கள் இது போன்ற இனிப்பு சுவை உள்ள தின்பண்டங்களை தவிர்த்து விடுங்கள். மற்ற படி, பாலில் நீங்கள் சிறிது இனிப்பு சேர்த்து கொடுக்கலாம்.
பதப்படுத்தப்படும் உணவுகளான பேஸ்டுரைஸ் செய்யாத பால் பொருள்கள், யோகர்ட், சீஸ், ஜூஸ் போன்றவற்றை குழந்தைக்கு கட்டாயம் கொடுக்க கூடாது. ஏனென்றால், அதில் உள்ள ஆபத்தான பாக்டீரியாக்கள், குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி விடும். இதன் விளைவாக, உயிருக்கு ஆபத்தான நோய் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது. ஒரு வயதுக்கு பிறகு, நீங்கள் உங்கள் குழந்தைக்கு உப்பு சேர்த்து உணவு கொடுக்கலாம். ஆனால் அதிகப்படியான உப்பு கொண்ட பாக்கெட் உணவுகள், தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அது உங்கள் குழந்தைக்கு உடல் பருமனை ஏற்படுத்துவதோடு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
குழந்தைகளுக்கு இரண்டு வயது முடியும் வரை காஃபி டீ கொடுக்க கூடாது. அதே போல் குழந்தைக்கு ஊட்டச்சத்து அளிக்கும் என்று விற்கப்படும் பானங்களும் குழந்தைகளின் உடலுக்கு நல்லது அல்ல. ஏனென்றால், காபியில் இருக்கும் கஃபைன் மற்றும் தேநீரில் இருக்கும் டானின் உணவில் இருக்கும் இரும்புச்சத்து உறிஞ்சுவதை தடுக்கலாம். அதனால் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பசும்பால் மட்டும் கொடுப்பது நல்லது. அதே போன்று குளிர்பானங்களும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
Read more: ஆள விடுங்கடா சாமி…. எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன்…