fbpx

சொந்த யூடியூப் சேனல் தொடங்க ஆர்வம் உள்ள நபர்களுக்கு… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த மூன்று நாள் பயிற்சி தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணையதளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வரும் 22.07.2024 முதல் 24.07.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. 44-22252081/22252082, 8668102600/86681 00181/7010143022 ஆகும். முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

English Summary

For people who are interested in starting their own YouTube channel

Vignesh

Next Post

உங்கள் கனவில் இந்த பொருட்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? இனி கவலையே வேண்டாம்..!!

Fri Jul 19 , 2024
Seeing Deepam or Harathi in a dream is considered auspicious. It means good times are about to start for you. Good news soon. Happiness and wealth will increase.

You May Like