மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளுக்கு இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வை நடத்தவிருக்கிறது. நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் தகுதிபடைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 11.00 மணிகுள் சமர்ப்பிக்க வேண்டும். இணையம் வழியாக கட்டணம் செலுத்த 05.08.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும். கணினி அடிப்படையிலான தேர்வு 2022 அக்டோபரில் நடைபெறும். தென்மண்டலத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் 3, தமிழ்நாட்டில் 3, தெலங்கானாவில் 1 என மொத்தம் 7 மையங்கள் அல்லது நகரங்களில் தேர்வு நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குனர் நாகராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.