fbpx

செக்…! 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு…! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

அரசு பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம், வரும் 1-ம் தேதி மாலை 3முதல் 4.30 மணி வரை நடைபெறஉள்ளது. இதில் பள்ளி வளர்ச்சிப்பணிகள், பள்ளி செல்லாத இடைநின்றவர்களைக் கண்டறிதல், நிதி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. குறிப்பாக 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வழிசெய்ய வேண்டும்.

வருகைப்பதிவு அடிப்படையில் 15 நாட்களுக்குமேல் பள்ளிக்கு வராதவர்களை இடைநின்றவர்களாக கருதி, அவர்களை தொடர்பு கொண்டு கல்வியை தொடர்வதற்கான பணிகளை குழு முன்னெடுக்க வேண்டும். எஸ்எம்சி குழுவில்உள்ள ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட உறுப்பினர்கள்100 சதவீதம் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இதில் எடுத்த முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், எஸ்எம்சி குழு கூட்ட விவரங்களை தொகுப்பு அறிக்கையை இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இனி Voice மூலம் பணத்தை அனுப்பலாம்!… யுபிஐயில் புதிய அப்டேட்!… எப்படி தெரியுமா?

Mon Aug 28 , 2023
Voice மூலம் எளிமையாக பயனாளர்களுக்கு தேவையான பணத்தை அனுப்பும் புதிய அம்சத்தை யுபிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த அம்சத்தின் மூலமாக ஒரு நாளைக்கு […]
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்..!! இனி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம்..!! முக்கிய அறிவிப்பு

You May Like