fbpx

Job Camp: படித்து வேலை இல்லா நபர்களுக்கு இன்று காலை 9 மணி முதல்….! மிஸ் பண்ணிடாதீங்க…

தருமபுரி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தொன் போஸ்கோ கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசமானதாகும். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

English Summary

For those who are not educated and unemployed, starting from 9 am today.

Vignesh

Next Post

உங்கள் உடல் ஆரோக்கியமாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா..? அப்படினா இதை மட்டும் தொப்புளில் தடவுங்கள்..!!

Sat Feb 15 , 2025
Honey is a natural sweetener. Not only is it beneficial for health, it also contains many essential nutrients and antioxidants.

You May Like