fbpx

’இனி Amazon, Flipkart-ஐ மறந்துருங்க’..!! வந்தாச்சு மத்திய அரசின் புதிய தளம்..!!

Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளுக்கு மாற்றாக, மத்திய அரசு புதிய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் E-commerce என அழைக்கப்படும் மின்னணு வர்த்தகமானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தற்போது அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலானோர் வாங்கி வருகின்றனர். மேலும், இதற்கு Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், இந்தியாவில் ரீடைல் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதார வல்லுநர்கள் உள்ளனர். அதனால், இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

’இனி Amazon, Flipkart-ஐ மறந்துருங்க’..!! வந்தாச்சு மத்திய அரசின் புதிய தளம்..!!

இதனால், தற்போது ஒரு புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது Open Network for Digital Commerce என்ற ONDC தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இத்தளத்தை முதன் முதலில் பெங்களூருவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் சுமார் 20 நிறுவனங்கள் 255 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் முதலீடு செய்துள்ளனர். இந்த தளத்தை பயன்படுத்தி நாட்டில் இருக்கும் சிறு ரீடைல் விற்பனையாளர்களை ஒருங்கிணைக்க முடியும். அதன்பின்பு இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும்.

’இனி Amazon, Flipkart-ஐ மறந்துருங்க’..!! வந்தாச்சு மத்திய அரசின் புதிய தளம்..!!

இதனால், பொதுமக்கள் தற்போது அதிகம் உபயோகித்து வரும் Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளை மறக்க ஆரம்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிக லாபத்தை பெற முடியும். அதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலை உயரும். இந்த ONDC தளத்தில் Amazon, Flipkart உள்ளிட்ட செயலிகளில் பெறுவது போன்று பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளைச் சிங்கிள் பையர் செயலி மூலமாக பெற்றுக்கொள்ளலாம். அதாவது வாட்ச்-ஐ தேடினால் இத்தளத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் காண்பிக்கப்படுவார்கள். இதில், உங்களுக்கு பிடித்த ஒன்றை நீங்கள் ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

Chella

Next Post

விஜய் டிவிக்குள் நுழைந்த கோபிநாத்..!! முதலில் என்ன வேலை செய்தார் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!

Tue Oct 4 , 2022
விஜய் தொலைக்காட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளே உள்ளனர். சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும், பல்வேறு புதிய நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுகின்றன. இந்த விஜய் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த சில ஷோ இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படிபட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ’நீயா […]
விஜய் டிவிக்குள் நுழைந்த கோபிநாத்..!! முதலில் என்ன வேலை செய்தார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!!

You May Like