தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஜனார்த்தனன்(76) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
முன்னாள் அமைச்சரான ஜனார்த்தனன் கடலூர் அண்ணா நகரை சேர்ந்தவர்.. இவர் 1972 முதல் 1980 வரை கடலூர் அதிமுக நகர செயலாளராக இருந்துள்ளது.. பின்னர் தலைமை செயற்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், விழுப்புரம் மாவட்ட செயலாளர், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.. மேலும் 1991 முதல் 1996 வரை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக ஜனார்த்தனன் இருந்தார்..
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜனார்த்தனன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.. ஜனார்த்தனனுக்கு பிரேமா என்ற மனைவியும், புருஷோத்தமன், கோபால கிருஷ்ணன் என்ற 2 மகன்களும் உள்ளனர்..
அவரின் மறைவுக்கு அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜனார்த்தனன், பின்னர் மேல்முறையீடு செய்து உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..