fbpx

பீகார் முன்னாள் அமைச்சர் உடல்நலக்குறைவால் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்..

பீகார் முன்னாள் அமைச்சர் சுபாஷ் சிங் இன்று காலை காலமானார்.

பாஜக எம்.எல்.ஏ.வும். முன்னாள் அமைச்சருமான சுபாஷ் சிங் உடல்நிலை சரியில்லாமல் டெல்லியின் எய்ம்ஸ் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.. அவருக்கு மனைவி, 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.. சுபாஷ் சிங்கின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் அவர் வாக்களிக்கவில்லை.. பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்காக ஒரே எம்.எல்.ஏ சுபாஷ் சிங் தான்..

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தின் பிரபலமான பாஜக தலைவராக இருந்தவர் சுபாஷ் சிங்.. கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை அவர் சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. 2005,2010,2015,2020 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர், 2020-ல் அம்மாநில அமைச்சரவையில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அதிகமாக ஆப்பிள் சாப்பிடும் நபரா நீங்கள்.. அப்ப முதல்ல இதை படிங்க...

Tue Aug 16 , 2022
ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.. எனவே அனைவரும் தவறாமல் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.. தினமும் ஒரு ஆப்பிளை மட்டும் சாப்பிட்டு வந்தால் பல நோய்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.. ஆனால் அதிகளவு ஆப்பிளை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? தேவைக்கு அதிகமாக ஆப்பிளை உட்கொண்டால், பல நோய்கள் ஏற்படும் […]
வரலாறு காணாத விலையும்.. வாழவே முடியாத நிலையும்..! மெழுகுவர்த்தியுடன் சேர்ந்து உருகும் இலங்கை மக்கள்..!

You May Like