காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரோகன் குப்தா பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரோகன் குப்தா பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி சனாதன தர்மத்தை இழிவாக பேசிய பொழுது அதற்கு கண்டனம் தெரிவித்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஆளும் கட்சியில் சேர்ந்தார்.
குப்தா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதன் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், கட்சியின் தகவல் தொடர்பு பிரிவில் உள்ள ஒரு தலைவர் தன்னை அவமதித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஏறக்குறைய 15 ஆண்டுகளாகத் தான் இணைந்திருந்த காங்கிரஸைக் கடுமையாகச் சாடிய குப்தா, அது திசையற்றுப் போய்விட்டதாகவும், முரண்பாடுகள் நிறைந்ததாகவும், நம்பகத்தன்மையை இழக்க வழிவகுக்கும் என்றும் கூறினார்.
மேலும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இருந்து காங்கிரஸ் விலகி இருப்பது, CAA க்கு எதிர்ப்பு மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளுடன் இணைந்து தனது கருத்தை வெளிப்படுத்தியதை அவர் மேற்கோள் காட்டினார். 2047 ஆம் ஆண்டிற்குள் பாஜக தலைமையின் செயல்திட்டமான “விக்சித் பாரத்” திட்டத்திற்கு குப்தா தனது ஆதரவைத் தெரிவித்தார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார்.