மனோஜ் திவாரி 2006-07 ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை தொடரில், 99.50 சராசரியில் ரன்களை குவித்து, 2008ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு அறிமுகமானார். 2008ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம்பெற்றாலும், 2011ஆம் ஆண்டில்தான், தனது முதல் சதத்தை அடித்தார். இந்த நிலையில், மனோஜ் திவாரி, அப்போதைய தோனி மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அப்போது தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். இந்திய அணி எப்போதும் கேப்டனின் திட்டத்தின் படி தான் செயல்படும். மாநில அணியில் அப்படி நடக்காது. ஆனால், இந்திய அணியில் எல்லாமே கேப்டன் கையில் தான் உள்ளது. கபில் தேவின் காலத்தில் அவர்தான் இந்திய அணியை நடத்தினார். அடுத்து சுனில் கவாஸ்கர் வந்தபோது அவர் முடிவுகளை எடுத்தார். அதன் பின் முகமது அசாருதீன் அதை செய்தார்.
கண்டிப்பான நிர்வாகி வந்து ஒரு விதியை உருவாக்காத வரை இது தொடரும். சதம் அடித்த பிறகு 14 போட்டிகளில் நான் நீக்கப்பட்டேன். ஒரு சதம் அடித்த பிறகு ஒரு வீரர் கைவிடப்பட்டால் அதற்கான வெளிப்படையான காரணத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் எனக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை..
அப்போது அணியில் இருந்த வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்ற டூரில் அவர்கள் ரன் எடுக்கவில்லை. இங்கு நான் சதமடித்து ஆட்ட நாயகன் விருதை வென்ற பிறகும், பிளேயிங் லெவன் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. ஆறு மாதத்தில் 14 போட்டிகளுக்கு அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தேன். அந்த நேரத்தில் நீக்கப்பட்ட வீரர் என்பதால் எனக்கு போதிய பயிற்சியும் கிடைக்கவில்லை. நான் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன். ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அதை செய்யவில்லை.” என மனோஜ் திவாரி கூறி இருக்கிறார்.
Read more : 6,400 Km.. 9 நாடுகளை இணைக்கும் அமேசான் நதி.. ஒரு பாலம் கூட கட்டப்படாதது ஏன்..? – ஆச்சரிய உண்மைகள்!