முன்னாள் பிரபல இந்திய சர்வதேச கால்பந்து வீரர் பிரபாகர் மிஸ்ரா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.
1970 களில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான மிஸ்ரா, 1976 இல் டாக்காவில் நடந்த ஆகா கான் தங்கக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடினார் மற்றும் இலங்கைக்கு எதிராக ஒரு கோல் அடித்த பெருமையைப் பெற்றார். உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில், பீகார் அணிக்காக விளையாடிய மிஸ்ரா, சந்தோஷ் டிராபியில் மாநில அணிக்கு கேப்டனாக இருந்தார்., பீகார்-ஜார்கண்ட் பிராந்தியத்தில் கால் பந்து விளையாட்டை வளர்ப்பதற்கு அயராது உழைத்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.