குஜராத் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் தோகத் – கோத்ரா நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் காயமடைந்த 11 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரவின்சிங் ஜெய்தாவத், தோகத் – கோத்ரா நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தூருக்குச் செல்லும் பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சாலையோரத்தில் பழுதுபார்த்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கோத்ரா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் பதினொரு பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக அவர் கூறினார்.