fbpx

இன்வெர்ட்டரில் இருந்து பரவிய தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

டெல்லியில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

டெல்லி பிரேம் நகரில் உள்ள ஒரு வீட்டில், இன்வெர்ட்டரில் இருந்து தீப்பிடித்து சோபாவில் தீப்பற்றியது. வீடு முழுவதும் பரவிய தீயினால் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நான்கு பேர் தீயில் சிக்கினர். தகவலறிந்த டெல்லி தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்பட்ட வீட்டிலிருந்து பலத்த தீக்காயங்களுடன் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் 4 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஹீரா சிங் (48), நீது சிங் (46), ராபின் (22), லக்ஷ்யா (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையிலேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; மீண்டும் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்வு செய்ய பாஜக முடிவு!!

English Summary

Four members of the same family were burnt to death in a house fire in Delhi this morning.

Next Post

வரி விலக்கு பெறுவது எப்படி? பணத்தை சேமிக்க ஈஸி டிப்ஸ் இதோ!!

Tue Jun 25 , 2024
At the end of each financial year, you pay income tax at different rates based on income and other gains. In this case, according to the provisions of the Income Tax Act, 1961, certain tax concessions and exemptions are provided by the government.

You May Like