ஓசூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு வயது குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தம்பள்ளியைச் சார்ந்தவர் நாகராஜ். 30 வயதான இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவி மற்றும் தனது மகளுடன் ராயக்கோட்டை என்ற பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது கேலமங்கலம் நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்று கெத்தன பள்ளி அருகே வைத்து இவரது பைக் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் அவரது நான்கு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விபத்தில் காயமடைந்த மனைவி மற்றும் கணவராகிய இருவரும் தற்போது அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் முனியம்மாள் மற்றும் நாகராஜன் ஆகியோரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.